அதிகாரம் / Chapter 31
திருக்குறள் 303
மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீயபிறத்தல் அதனான் வரும்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
வெகுளியை யார்மாட்டுஞ் செய்தலை மறக்க; தீயன பிறத்தல் அவ்வெகுளியானே வருமாதலான். இது வெகுளாமை வேண்டுமென்றது.
பரிமேலழகர்
யார் மாட்டும் வெகுளியை மறத்தல் - யாவர் மாட்டும் வெகுளியை ஒழிக; தீய பிறத்தல் அதனான் வரும் - ஒருவற்குத் தீயன எல்லாம் உளவாதல் அதனான் வரும் ஆகலான். விளக்கம் (வலியார், ஒப்பார், எளியார் என்னும் மூவர் மாட்டும் ஆகாமையின் 'யார் மாட்டும்' என்றும், மனத்தால் துறந்தார்க்கு ஆகாதனவாகிய தீச்சிந்தைகள் எல்லாவற்றையும் பிறப்பித்தலின் 'தீய பிறத்தல் அதனான் வரும்,' என்றும் கூறினார்.)
English explanation
If any rouse thy wrath, the trespass straight forget;For wrath an endless train of evils will beget
Forget anger towards every one, as fountains of evil spring from it.