அதிகாரம் / Chapter 31

திருக்குறள் 304

நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்பகையும் உளவோ பிற.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

நகுதலையும் மகிழ்தலையுங் கெடுக்கின்ற சினத்தைப் போல, பகையா யிருப்பனவும் வேறு சிலவுளவோ? இஃது இன்பக்கேடு வருமென்றது.

பரிமேலழகர்

நகையும் உவகையம் கொல்லும் சினத்தின - துறந்தார்க்கு அருளான் உளவாய முகத்தின்கண் நகையையும் மனத்தின் கண் உவகையையும் கொன்று கொண்டெழுகின்ற சினமே அல்லாது; பிற பகையம் உளவோ - அதனின் பிறவாய பகைகளும் உளவோ? இல்லை. விளக்கம் (துறவால் புறப்பகை இலராயினும் உட்பகையாய் நின்ற அருள்முதலிய நட்பினையும் பிரித்துப் பிறவித் துன்பமும் எய்துவித்தலான், அவர்க்குச் சினத்தின் மிக்க பகை இல்லையாயிற்று. இவை மூன்று பாட்டானும் வெகுளியது தீங்கு கூறப்பட்டது.)

English explanation

Wrath robs the face of smiles, the heart of joy,What other foe to man works such annoy

Is there a greater enemy than anger, which kills both laughter and joy ?