அதிகாரம் / Chapter 31
திருக்குறள் 305
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்தன்னையே கொல்லுஞ் சினம்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
ஒருவன் தன்னைத் தான் காக்கவேண்டுவனாயின், சினந்தோன்றாமற் காக்க; காவானாயின் சினம் தன்னையே கொல்லும், இஃது உயிர்க்கேடு வருமென்றது.
பரிமேலழகர்
தன்னைத்தான் காக்கின் சினம் காக்க - தன்னைத்தான் துன்பம் எய்தாமல் காக்க நினைத்தானாயின் தன் மனத்துச் சினம் வராமல் காக்க; காவாக்கால் சினம் தன்னையே கொல்லும் - காவானாயின், அச் சினம் தன்னையே கெடுக்கும் கடுந்துன்பங்களை எய்துவிக்கும். விளக்கம் ("வேண்டிய வேண்டியாங்கு எய்தல்" (குறள் 265) பயத்தாய தவத்தைப் பிறர்மேல் சாபம் விடுவதற்காக இழந்து, அத் தவத்துன்பத்தோடு பழைய பிறவித்துன்பமும் ஒருங்கே எய்துதுலின் 'தன்னையே கொல்லும்' என்றார். ''கொல்ச் சுரப்பதாங் கீழ்" (நாலடி (279) என்புழிப்போலக் கொலைச்சொல் ஈண்டுத் துன்பமிகுதி உணர்த்தி நின்றது.)
English explanation
If thou would'st guard thyself, guard against wrath alway;'Gainst wrath who guards not, him his wrath shall slay
If a man would guard himself, let him guard against anger; if he do not guard it, anger will kill him.