அதிகாரம் / Chapter 62

திருக்குறள் 618

பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்துஆள்வினை இன்மை பழி.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

யார்க்கும் புண்ணியமின்மை குற்றமாகாது. அறியத் தகுவன அறிந்து முயற்சியில்லாமையே குற்றமாவது. அறிவு- காரிய அறிவு. புண்ணியமில்லாதார் முயன்றால் வருவதுண்டோ என்றார்க்கு, இது கூறப்பட்டது.

பரிமேலழகர்

பொறி இன்மை யார்க்கும் பழியன்று-பயனைத் தருவதாய விதியில்லாமை ஒருவற்கும் பழியாகாது; அறிவு அறிந்து ஆள்வினை இன்மை பழி-அறியவேண்டும் அவற்றை அறிந்து வினைசெய்யாமையே பழியாவது. விளக்கம் (அறிய வேண்டுவன- வலி முதலாயின. 'தெய்வம் இயையாவழி ஆள்வினை உடைமையால் பயன் இல்லை,' என்பாரை நோக்கி, 'உலகம் பழவினை பற்றிப் பழியாது, ஈண்டைக் குற்றமுடைமை பற்றியே பழிப்பது' என்றார். அதனால் விடாது முயல்க என்பது குறிப்பெச்சம்..)

English explanation

'Tis no reproach unpropitious fate should ban;But not to do man's work is foul disgrace to man

Adverse fate is no disgrace to any one; to be without exertion and without knowing what should be known, is disgrace.