அதிகாரம் / Chapter 62

திருக்குறள் 619

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்மெய்வருத்தக் கூலி தரும்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

புண்ணியம் இன்மையால் ஆக்கம் இல்லையாயினும் ஒருவினையின் கண்ணே முயல்வானாயின் முயற்சி தன்னுடம்பினால் வருந்திய வருத்தத்தின் அளவு பயன் கொடுக்கும். இது புண்ணியமில்லையாயினும் பயன் கொடுக்கும் என்றது.

பரிமேலழகர்

தெய்வத்தான் ஆகாது எனினும்-முயன்ற வினை பால்வகையால் கருதிய பயனைத் தாராதாயினும்; முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும்-முயற்சி தனக்கு இடமாய உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலி அளவு தரும், பாழாகாது. விளக்கம் (தெய்வத்தான் ஆயவழித் தன் அளவின் மிக்க பயனைத் தரும என்பது உம்மையால் பெற்றாம். இரு வழியும் பாழாகல் இன்மையின், தெய்வம் நோக்கியிராது முயல்க என்பது கருத்து.)

English explanation

Though fate-divine should make your labour vain;Effort its labour's sure reward will gain

Although it be said that, through fate, it cannot be attained, yet labour, with bodily exertion, will yield its reward.