அதிகாரம் / Chapter 115
திருக்குறள் 1141
அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்பலரறியார் பாக்கியத் தால்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
நமது புணர்ச்சியால் வந்த அலர் எழுதலினானே அவளது ஆருயிர் நிற்கும். அவ்வாறு உயிர்நிற்றலை எங்கள் புண்ணியத்தாலே பலரறியா ராயினார்: அறிவாராயின் எமக்கு ஏதிலராய் அலர்தூற்றுவார், இவள் இறந்துபட வேண்டுமென்று தூற்றார்.
பரிமேலழகர்
அல்ல குறிப்பட்ட பிற்றைஞான்று வந்த தலைமகளைத் தோழி அலர் கூறி வரைவு கடாயவழி அவள் சொல்லியது. அலர் எழ ஆர் உயிர் நிற்கும் - மடந்தையொடு எம்மிடை நட்பு ஊரின்கண் அலாராயெழுதலான் அவளைப் பெறாது வருந்தும் என் அரிய உயிர் பெற்றதுபோன்று நிலைபெறும்; அதனைப் பாக்கியத்தால் பலர் அறியார் - அந்நிலை பேற்றைத் தெய்வத்தால் யானை அறிவதல்லது கூறுகின்ற பலரும் அறியார். விளக்கம் (அல்ல குறிப்பிட்டுத் தலைமகளை எய்தப்பெறாத வருத்தமெல்லாம் தோன்ற, 'அரிய உயிர்' என்றும், அங்ஙனம் அரியாளை எளியளாக்கி எடுக்கின்றமையின், அஃது அவ்வாருயிர்க்குப் பற்றுக்கோடாக நின்றது என்பான், 'அலர் எழ ஆருயிர் நிற்கும்' என்றும், 'பற்றுக்கோடாதலை அவ்வேதிலார் அறியின் தூற்றாது ஒழிவர்; ஒழியவே, ஆருயிர் போம்; ஆகலான், அவரறியா தொழிகின்றது தெய்வத்தான், என்றும் கூறினான். முற்று உம்மை விகாரத்தால் தொக்கது.)
English explanation
By this same rumour's rise, my precious life stands fast;Good fortune grant the many know this not
My precious life is saved by the raise of rumour, and this, to my good luck no others are aware of.