அதிகாரம் / Chapter 115
திருக்குறள் 1142
மலரன்ன கண்ணாள் அருமை அறியாதுஅலரெமக்கு ஈந்ததிவ் வூர்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
பூவொத்த கண்ணாளது இற்பிறப்பின் அருமையை யறியாதே, இவ்வூரவர் எங்கட்கு அலரைத் தந்தார். எளியாரைச் சொல்லுமாறுபோலச் சொல்லாநின்றா ரென்றவாறு.
பரிமேலழகர்
இதுவும் அது. மலர் அன்ன கண்ணாள் அருமை அறியாது - மலர்போலும் கண்ணையுடையாளது எய்தற்கு அருமை அறியாது; இவ்வூர் அலர் எமக்கு ஈந்தது - இவ்வூர் அவளை எளியளாக்கி அவளோடு அலர் கூறலை எமக்கு உபகரித்தது. விளக்கம் (அருமை: அல்ல குறிப்பாட்டானும் இடையீடுகளானும் ஆயது. 'ஈந்தது' என்றான், தனக்குப் பற்றுக் கோடாகலின், அலர் கூறுவாரை அவர் செய்த உதவி பற்றி 'இவ்வூர்' என்றான்.)
English explanation
The village hath to us this rumour giv'n, that makes her mine;Unweeting all the rareness of the maid with flower-like eyne
Not knowing the value of her whose eyes are like flowers this town has got up a rumour about me.