அதிகாரம் / Chapter 114

திருக்குறள் 1140

யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்யாம்பட்ட தாம்படா ஆறு.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

யாங் கேட்குமாறு மன்றிக் கண்ணாற் காணுமாறு எம்மை யறிவிலார் நகாநின்றார். அவரங்ஙனஞ் செய்கின்றது யாமுற்ற நோய்கள் தாமுறாமையான்.

பரிமேலழகர்

செவிலிக்கு அறத்தொடு நின்று வைத்து, 'யான் நிற்குமாறு என்னை!' என்று நகையாடிய தோழியோடு புலந்து தன்னுள்ளே சொல்லியது. யாம் கண்ணிற்கான அறிவில்லார் நகுப - யாம் கேட்குமாறு மன்றிக் கண்ணாற் காணுமாறு எம்மை அறிவிலார் நகாநின்றார்; யாம் பட்ட தாம்படாவாறு அவர் அங்ஙனஞ் செய்கின்றது யாம் உற்ற நோய்கள் தாம் உறாமையான். விளக்கம் ('கண்ணின்' என்றது, முன் கண்டறியாமை உணர நின்றது. அறத்தொடு நின்றமை அறியாது வரைவு மாட்சிமைப்படுகின்றிலள் எனப் புலக்கின்றாள் ஆகலின், ஏதிலாளாக்கிக் கூறினாள். இது, நகா நின்று சேண்படுக்குந் தோழிக்குத் தலைமகன் கூறியதாங்கால், அதிகாரத்திற்கு ஏலாமை அறிக.)

English explanation

Before my eyes the foolish make a mock of me,Because they ne'er endured the pangs I now must drie

Even strangers laugh (at us) so as to be seen by us, for they have not suffered.