அதிகாரம் / Chapter 114
திருக்குறள் 1139
அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்மறுகின் மறுகும் மருண்டு.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
என்னை யொழிந்த எல்லாரும் அறிவிலரென்றே சொல்லி என் காமமானது தலை மயங்கி மறுகின் கண்ணே வெளிப்படச் சுழலா நின்றது. சுழல்தல் - இவ்வாறு சொல்லித் திரிதல்.
பரிமேலழகர்
இதுவும் அது. எல்லாரும் அறிகிலார் என்று - யான் முன் அடங்கி நிற்றலான் எல்லாரும் என்னை அறிதல் இலர்; இனி அவ்வாறு நில்லாது யானை வெளிப்பட்டு அறிவிப்பல் என்று கருதி; என் காமம் மறுகில் மருண்டு மறுகும் - என் காமம் இவ்வூர்மறுகின்கண்ணே மயங்கிச் சுழலாநின்றது. விளக்கம் (மயங்குதல் அம்பலாதல்; மறுகுதல்; அலராதல். 'அம்பலும் அலருமாயிற்று. இனி 'அறத்தொடு நிற்றல் வேண்டும்', என்பதாம். 'அறிவிலார்' என்பதூஉம் பாடம்.)
English explanation
'There's no one knows my heart,' so says my love,And thus, in public ways, perturbed will rove
My lust, feeling that it is not known by all, reels confused in the streets (of this town).