அதிகாரம் / Chapter 131
திருக்குறள் 1302
உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிதுமிக்கற்றால் நீள விடல்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
நுகர்வனவற்றிற்கு உப்பமைந்தாற்போல இனிமை யுண்டாக்கும் புலவி: அதனை நீளவிடல் அவ்வுப்பு சிறிது மிக்காற்போல இன்னாதாம். இது வாயில் வேண்டிய தோழிக்குத் தலைமகள் மறுத்த விடத்துப் புலவியை நீளவிடுதல் தகாதென்று அவள் கூறியது.
பரிமேலழகர்
புலவியொழிந்து வாயில் நேரும் வகை அவர் சொல்லியது. புலவி உப்பு அமைந்தற்று - புலவி கலவி இன்பம் செயற்கு வேண்டுமளவிற்றாதல் உப்புத் துய்ப்பனவற்றை இன்சுவையாக்கற்கு வேண்டுமளவிற்றாதல் போலும்; சிறிது நீளவிடல் அது மிக்கற்று - இனி அதனை அவ்வளவில் சிறிது மிகவிடுதல் அவ்வுப்பு அளவின் மிக்காற்போலும். விளக்கம் (நீள விடல் - அளவறிந்துணராது. கலவிமேல் எழுந்த குறிப்பழுங்குமளவும் செய்தல்; 'சிறிது நீள விடலாகாது' என்றாள். நேர்விக்கின்றாளாகலின், 'உப்பு மிக்க வழித் துய்ப்பது சுவையின்றானாற் போலப் புலவி மிக்கவழிக் கல்வி இன்ப மின்றாம்' என்றமையின், இது பண்பு உவமை.)
English explanation
A cool reserve is like the salt that seasons well the mess,Too long maintained, 'tis like the salt's excess
A little dislike is like salt in proportion; to prolong it a little is like salt a little too much.