அதிகாரம் / Chapter 131

திருக்குறள் 1303

அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்புலந்தாரைப் புல்லா விடல்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

தம்மைப் பெறாது புலந்த மகளிரைப் புலவிநீக்கிக் கலவாது ஆடவர் சேறல், பண்டே துன்பமுற்றழிந்தாரை அதன் மேலும் மிக்க துன்பத்தினைச் செய்தாற்போலும்.

பரிமேலழகர்

பரத்தையர் இடத்து நின்றும் வந்த தலைமகனோடு தலைமகள் புலந்து சொல்லியது. தம்மைப் புலந்தாரைப் புல்லாவிடல் - தம்மைப் பெறாது புலந்த மகளிரைப் புலவி நீக்கிக் கலவாது ஆடவர் சேறல்; அலந்தாரை அல்லல் நோய் செய்தற்று - பண்டே துன்பமுற்று அழிந்தாரை அதன் மேலும் மிக்க துன்பத்தினைச் செய்தாற்போலும். விளக்கம் ('பிறர்பால் சேறலின் நும்மைப் பெறாது புலந்தூடியிருக்கின்ற பரத்தையரைப் போய்ப் புலவி நீக்கிப் புல்லீராயின், அவராற்றார்' என்பதாம்.)

English explanation

'Tis heaping griefs on those whose hearts are grieved;To leave the grieving one without a fond embrace

For men not to embrace those who have feigned dislike is like torturing those already in agony.