அதிகாரம் / Chapter 16

திருக்குறள் 160

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்இன்னாச்சொல் நோற்பாரின் பின்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

உண்ணாது பொறுப்பார் எல்லாரினும் பெரியர்: அவர் பெரியாராவது பிறர் சொல்லுங் கடுஞ்சொல்லைப் பொறுப்பாரின் பின், இது தவம் பண்ணுவாரினும் பெரியதென்றது.

பரிமேலழகர்

உண்ணாது நோற்பார் பெரியர்-விரதங்களான் ஊனைத் தவிர்த்து உற்ற நோயைப் பொறுப்பார் எல்லாரினும் பெரியர்; பிறர் சொல்லும் இன்னாச் சொல் நோற்பாரின் பின்-அவர் பெரியராவது, தம்மைப் பிறர் சொல்லும் இன்னாச் சொல்லைப் பொறுப்பாரின் பின். விளக்கம் (பிறர்-அறிவிலாதார். நோலாமைக்கு ஏதுஆகிய இருவகைப் பற்றொடு நின்றே நோற்றலின், 'இன்னாச் சொல் நோற்பாரின் பின்' என்றார். இவை இரண்டு பாட்டானும் பிறர் மிகைக்கச் சொல்லியன பொறுத்தல் கூறப்பட்டது.)

English explanation

Though 'great' we deem the men that fast and suffer pain,Who others' bitter words endure, the foremost place obtain

Those who endure abstinence from food are great, next to those who endure the uncourteous speech of others.