அதிகாரம் / Chapter 16

திருக்குறள் 159

துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்இன்னாச்சொல் நோற்கிற் பவர்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

மிகையாய்ச் சொல்லுவாரது தீச்சொல்லைப் பொறுக்குமவர், துறந்தவர்களைப் போலத் தூய்மை யுடையார். இது பற்றறத் துறந்தவரோ டொப்பரென்றது.

பரிமேலழகர்

துறந்தாரின் தூய்மை உடையர் - இல்வாழ்க்கைக்கண் நின்றேயும் துறந்தார் போலத் தூய்மையுடையார்; இறந்தார் வாய் இன்னாச் சொல் நோற்சிற்பவர்-நெறியைக் கடந்தார வாய் இன்னாச் சொல்லைப் பொறுப்பவர். விளக்கம் (தூய்மை: மனம் மாசு இன்மை. 'வாய்' என வேண்டாது கூறினார், 'தீய சொற்கள் பயின்றது' எனத் தாம் வேண்டிய தன் இழிபு முடித்தற்கு.)

English explanation

They who transgressors' evil words endureWith patience, are as stern ascetics pure

Those who bear with the uncourteous speech of the insolent are as pure as the ascetics.