அதிகாரம் / Chapter 16

திருக்குறள் 158

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்தகுதியான் வென்று விடல்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

தமது செல்வ மிகுதியாலே மிகையானவற்றைச் செய்தவர்களைத் தாங்கள் தமது பொறையினாலே வென்று விடுக. இது பொறுத்தானென்பது தோல்வியாகாது: அதுதானே வெற்றியாமென்றது.

பரிமேலழகர்

மிகுதியான் மிக்கவை செய்தாரை-மனச்செருக்கால் தங்கண் தீயவற்றைச் செய்தாரை; தாம் தம் தகுதியான் பொறையான் வென்று விடுக. விளக்கம் (தாமும் அவர்கண் தீயவற்றைச் செய்து தோலாது, பொறையான் அவரின் மேம்பட்டு வெல்க என்பதாம். இவை நான்கு பாட்டானும் பிறர் செய்தன பொறுத்தல் சொல்லப்பட்டது.)

English explanation

With overweening pride when men with injuries assail,By thine own righteous dealing shalt thou mightily prevail

Let a man by patience overcome those who through pride commit excesses.