அதிகாரம் / Chapter 16
திருக்குறள் 157
திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்துஅறனல்ல செய்யாமை நன்று.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
தகுதியல்லாதவற்றைத் தனக்குப் பிறர்செய்தாராயினும் அவற்றைத் தானுஞ் செய்தால் அவர்க்கு உளதாம் நோவுக்கு நொந்து அறமல்லாதவற்றைச் செய்யாமை நன்று.
பரிமேலழகர்
திறன் அல்ல தன் பிறர் செய்யினும்-செய்யத்தகாத கொடியவற்றைத் தன்கண் பிறர் செய்தாராயினும்; நோநொந்து அறன் அல்ல செய்யாமை நன்று-அவர்க்கு அதனால் வரும் துன்பத்திற்கு நொந்து, தான் அறனல்லாத செயல்களைச் செய்யாதிருத்தல் ஒருவனுக்கு நன்று. விளக்கம் (உம்மை: சிறப்பு உம்மை. துன்பத்திற்கு நோதலாவது "உம்மை-எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல்" (நாலடி.58) என்று பரிதல்.)
English explanation
Though others work thee ill, thus shalt thou blessing reap;Grieve for their sin, thyself from vicious action keep
Though others inflict injuries on you, yet compassionating the evil (that will come upon them) it will be well not to do them anything contrary to virtue.