அதிகாரம் / Chapter 16

திருக்குறள் 156

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்பொன்றுந் துணையும் புகழ்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

ஒறுத்தவர்க்கு அற்றைநாளை யின்பமே உண்டாம்: பொறுத்தவர்க்குத் தாம் சாமளவும் புகழுண்டாம். இது புகழுண்டா மென்றது.

பரிமேலழகர்

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம்-தமக்குத் தீங்கு செய்தவனை ஒறுத்தார்க்கு உண்டாவது அவ்வொருநாளை இன்பமே; பொறுத்தார்க்குப் பொன்னும் துணையும் புகழ்-அதனைப் பொறுத்தார்க்கு உலகம் அழியுமளவும் புகழ் உண்டாம். விளக்கம் (ஒருநாளை இன்பம், அந்நாள் ஒன்றினுங் 'கருதியது முடித்தேம்' எனத் தருக்கியிருக்கும் பொய்யின்பம். ஆதாரமாகிய உலகம் பொன்றப் புகழும் பொன்றும் ஆகலின், ஏற்புடைய 'உலகு' என்னும் சொல் வருவித்து உரைக்கப்பட்டது.)

English explanation

Who wreak their wrath have pleasure for a day;Who bear have praise till earth shall pass away

The pleasure of the resentful continues for a day. The praise of the patient will continue until (the final destruction of) the world.