அதிகாரம் / Chapter 16

திருக்குறள் 155

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

தமக்குத் துன்பஞ் செய்தாரை மாறாக ஒறுத்தாரை யொரு பொருளாக மதித்து வையார். பொறுத்தாரைப் பொன்னைப் பொதிந்து வைத்தாற்போலப் போற்றுவார் உலகத்தார்.

பரிமேலழகர்

ஒறுத்தாரை, ஒன்றாக வையார்-பிறன் தமக்குத் தீங்கு செய்தவழிப் பொறாது அவனை ஒறுத்தாரை அறிவுடையார் ஒரு பொருளாக மனத்துக் கொள்ளார்; பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து வைப்பர்-அதனைப் பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து கொள்வர். விளக்கம் (ஒறுத்தவர் தாமும் அத்தீங்கு செய்தவனோடு ஒத்தலின், 'ஒன்றாக வையார்' என்றார். 'பொதிந்து வைத்தல்', சால்புடைமை பற்றி இடைவிடாது நினைத்தல்.

English explanation

Who wreak their wrath as worthless are despised;Who patiently forbear as gold are prized

(The wise) will not at all esteem the resentful. They will esteem the patient just as the gold which they lay up with care.