அதிகாரம் / Chapter 57
திருக்குறள் 563
வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
அரசன் அஞ்சத்தகுவனவற்றைச் செய்தொழுகும் வெங்கோலையுடையனாயின் அவன் ஒருதலையாகக் கடிதிற் கெடும்.
பரிமேலழகர்
வெருவந்த செய்து ஒழுகும் செங்கோலன் ஆயின்-குடிகள் வெருவிய செயல்களைச் செய்து நடக்கும் வெங்கோலனாம் ஆயின்; ஒருவந்தம் ஒல்லைக் கெடும்-அரசன் ஒருதலையாகக் கடிதில் கெடும். விளக்கம் (வெங்கோலன்' என்பது ஈண்டு வாளா பெயராய் நின்றது. 'ஒருவந்தம், ஒருதலை, ஏகாந்தம்' என்பன ஒரு பொருட்கிளவி. அச்செயல்களும் கேடுகளும் முன்னர்க் கூறப்படும்.)
English explanation
Where subjects dread of cruel wrongs endure,Ruin to unjust king is swift and sure
The cruel-sceptred king, who acts so as to put his subjects in fear, will certainly and quickly come to ruin.