அதிகாரம் / Chapter 128

திருக்குறள் 1271

கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்உரைக்கல் உறுவதொன் றுண்டு.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

நீ சொல்லாது மறைத்தாயாயினும் அதற்குடம்படாதே நின்னைக் கைகடந்து நின்னுண்கண்களே எனக்குச் சொல்லலுறுவதொரு காரியமுண்டாயிராநின்றது: இனியதனை நீயே தெளியச் சொல்வாயாக.

பரிமேலழகர்

பிரிந்து கூடிய தலைமகன் வேட்கை மிகவினாற் புதுவது பன்னாளும் பாராட்டத் தலைமகள் 'இது ஒன்று உடைத்து!' என அஞ்சியவழி, அதனை அவள் குறிப்பான் அறிந்து, அவன் அவட்குச் சொல்லியது. கரப்பினும் - நீ சொல்லாது மறைத்தாயாயினும்; எல்லா கை இகழ்ந்து - அதற்கு உடம்படாதே நின்னைக் கைகடந்து; நின் உண்கண் உரைக்கலுறுவது ஒன்று உண்டு - நின் உண்கண்களே எனக்குச் சொல்லல் உறுவதொரு காரியமுண்டாய் இரா நின்றது; இனி அதனை நீயே தௌ¢யச் சொல்வாயாக. விளக்கம் (காத்தல் - நாணால் அடக்குதல். தன்கண் பிரிதற்குறிப்புளதாகக் கருதி வேறுபட்டாளது வேறுபாடு குறிப்பான் அறிந்து அவட்குத் தன் பிரியாமைக் குறிப்பு அறிவுறுத்தவாறு.)

English explanation

Thou hid'st it, yet thine eye, disdaining all restraint,Something, I know not, what, would utter of complaint

Though you would conceal (your feelings), your painted eyes would not, for, transgressing (their bounds), they tell (me) something.