அதிகாரம் / Chapter 128

திருக்குறள் 1272

கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்பெண்நிறைந்த நீர்மை பெரிது.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

காண்பார் கண்ணிறைந்த அழகினையும் காம்பையொத்த தோளினையும் உடைய பேதைக்குப் பெண்மை நிறைந்த நீர்மை பெரிது.

பரிமேலழகர்

நாணால் அவள் அது சொல்லாளாயவழி அவன் தோழிக்குச் சொல்லியது. கண் நிறைந்த காரிகைக் காம்பு ஏர் தோள் பேதைக்கு. என் கண்ணிறைந்த அழகினையும் வேயையொத்த தோளினையும் உடைய நின் பேதைக்கு; பெண் நிறைந்த நீர்மை பெரிது - பெண்பாலரிடத்து நிறைந்த மடமை அவ்வளவன்றி மிகுந்தது. விளக்கம் (இலதாய பிரிவினைத் தன்கண் ஏற்றி அதற்கு அஞ்சுதலான், இவ்வாறு கூறினான்.)

English explanation

The simple one whose beauty fills mine eye, whose shoulders curveLike bambu stem, hath all a woman's modest sweet reserve

Unusually great is the female simplicity of your maid whose beauty fills my eyes and whose shoulders resemble the bamboo.