அதிகாரம் / Chapter 128
திருக்குறள் 1273
மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தைஅணியில் திகழ்வதொன்று உண்டு.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
கோவைப்பட்ட நீலமணியின்கண்ணே தோற்றுகின்ற நூல்போல, இம்மடந்தை அழகினுள்ளே இவள் மறைக்கவும் தோற்றுகின்றதொரு துன்பம் உணடு. அழகு - புணர்ச்சியால் வந்த அழகுபோலுமென்னும் குறிப்பு.
பரிமேலழகர்
இதுவும் அது. மணியில் திகழ்தரும் நூல்போல். கோக்கப்பட்ட பளிங்கு மணியகத்துக் கிடந்து புறத்துப் புலனாம் நூல் போல; மடந்தை அணியில் திகழ்வது ஒன்று உண்டு - இம்மடந்தையது அணியகத்துக் கிடந்து புறத்துப் புலனாகின்றதொரு குறிப்பு உண்டு. விளக்கம் (அணி - புணர்ச்சியான் ஆய அழகு. அதனகத்துக் கிடத்தலாவது, அதனோடு உடன் நிகழ்தற்பாலதன்றி வைத்து உடனிகழ்தல். 'அதனை யான் அறிகின்றிலேன், நீ அறிந்து கூறல் வேண்டும்,' என்பது கருத்து.)
English explanation
As through the crystal beads is seen the thread on which they 're strungSo in her beauty gleams some thought cannot find a tongue
There is something that is implied in the beauty of this woman, like the thread that is visible in a garland of gems.