அதிகாரம் / Chapter 83

திருக்குறள் 825

மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்சொல்லினால் தேறற்பாற்று அன்று.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

மனத்தால் பொருத்தமில்லாதவரை யாதொன்றன் கண்ணும் அவர் சொல்லினால் தௌ¤தற்பாலதன்று. இது சொல்லினால் அறிதலரிதென்றது.

பரிமேலழகர்

மனத்தின் அமையாதவரை - மனத்தால் தம்மொடு மேவாதாரை; எனைத்து ஒன்றும் சொல்லினால் தேறல் பாற்று அன்று - யாதொரு கருமத்தினும் சொல்லால் தௌ¢தல் முறைமைத்தன்று, நீதி நூல். விளக்கம் ('நீதி நூல்' என்பது அவாய் நிலையான் வந்தது. பகைமை மறைத்தற்பொருட்டுச் சொல்லுகின்ற வஞ்சனைச் சொல்லைச் செவ்விய சொல் எனக் கருதி, அவரைக் கருமங்களில் தௌ¢தல் நீதிநூல் முறைமை அன்று என்பதாம்.)

English explanation

When minds are not in unison, 'its never; just,In any words men speak to put your trust

In nothing whatever is it proper to rely on the words of those who do not love with their heart.