அதிகாரம் / Chapter 83

திருக்குறள் 826

நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்ஒல்லை உணரப் படும்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

உற்றாரைப்போல நல்லவானவை சொன்னாராயினும் பகைவர் சொல்லுஞ்சொல் விரைந்தறியப்படும்.

பரிமேலழகர்

நட்டார்போல் நல்லவை சொல்லினும் - நட்டார் போன்று நன்மை பயக்கும் சொற்களைச் சொன்னாராயினும்; ஒட்டார் சொல் ஒல்லை உணரப்படும் - பகைவர் சொற்கள் அது பயவாமை அச்சொல்லிய பொழுதே அறியப்படும். விளக்கம் ('சொல்லினும்' எனவே, சொல்லாமையே பெற்றாம். ஒட்டாராதலால் தீமை பயத்தல் ஒருதலை என்பார். 'ஒல்லை உணரப்படும் என்றார்.)

English explanation

Though many goodly words they speak in friendly tone,The words of foes will speedily be known

Though (one's) foes may utter good things as though they were friends, once will at once understand (their evil, import).