அதிகாரம் / Chapter 130
திருக்குறள் 1294
இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சேதுனிசெய்து துவ்வாய்காண் மற்று.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
நெஞ்சே! நீ புலவியை நீளச்செய்து பின்னை நுகரமாட்டாய்: ஆதலான் இனி அப்பெற்றிப்பட்ட எண்ணத்தை நின்னோடு எண்ணுவார் யார்? இல்லை.
பரிமேலழகர்
விளக்கம் (அப்பெற்றிப்பட்டன - புலக்கும் திறங்கள், 'காண்' என்பது உரையசை. 'மற்று' வினையாற்றின் கண் வந்தது. முன்னெல்லாம் புலப்பதாக எண்ணியிருந்து, பின் புணர்ச்சி விதும்பலின், இவ்வாறு கூறினாள்.)
English explanation
'See, thou first show offended pride, and then submit,' I bade;Henceforth such council who will share with thee my heart
O my soul! you would not first seem sulky and then enjoy (him); who then would in future consult you about such things?