அதிகாரம் / Chapter 14

திருக்குறள் 134

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

பிராமணன் வேதத்தினை ஓதி மறந்தானாயினும் பின்னும் ஓதிக் கொள்ளலாம்: ஒழுக்கங் குறையுமாயின் குலங்கெடும். இஃது ஒழுக்கம் கல்வியிலும் வலிதானவாறு கூறிற்று.

பரிமேலழகர்

ஓத்து மறப்பினும் கொளலாகும் கற்ற வேதத்தினை மறந்தானாயினும் அவ் வருணம் கெடாமையின் பின்னும் அஃது ஓதிக்கொள்ளலாம்; பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்-அந்தணனது உயர்ந்த வருணம் தன் ஒழுக்கம் குன்றக் கெடும். விளக்கம் (மறந்தவழி. இழிகுலத்தனாம் ஆகலின், மறக்கலாகாது என்னும் கருத்தான், 'மறப்பினும்' என்றார். சிறப்புடை வருணத்திற்கு மொழிந்தமையின், இஃது ஏனைய வருணங்கட்கும் கொள்ளப்படும்.)

English explanation

Though he forget, the Brahman may regain his Vedic lore;Failing in 'decorum due,' birthright's gone for evermore

A Brahman though he should forget the Vedas may recover it by reading; but, if he fail in propriety of conduct even his high bi rth will be destroyed.