அதிகாரம் / Chapter 14
திருக்குறள் 135
அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லைஒழுக்க மிலான்கண் உயர்வு.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
மனக்கோட்ட முடையவன்மாட்டு ஆக்கம் இல்லை யானாற் போல ஒழுக்கமில்லாதான் மாட்டு மிகுதியில்லையாம். இஃது உயர்ச்சியில்லையா மென்றது.
பரிமேலழகர்
அழுக்காறு உடையான்கண் ஆக்கம் போன்று - அழுக்காறுடையான்மாட்டு ஆக்கமில்லாதாற்போல; ஒழுக்கம் இலான் கண் உயர்வு இல்லை - ஒழுக்கம் இல்லாதவன் மாட்டும் உயர்ச்சி இல்லை. விளக்கம் (உவமையான் ஒழுக்கம் இல்லாதவன் சுற்றத்திற்கும் உயர்ச்சி இல்லை என்பது பெற்றாம்; என்னை? "கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்ற"மும் (குறள்.166) நல்கூர்தலின். உயர்வு: உயர் குலமாதல்.)
English explanation
The envious soul in life no rich increase of blessing gains,So man of 'due decorum' void no dignity obtains
Just as the envious man will be without wealth, so will the man of destitute of propriety of conduct be without greatness.