அதிகாரம் / Chapter 57

திருக்குறள் 569

செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்வெருவந்து வெய்து கெடும்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

தனக்குக் காவலானவற்றை முன்னேயமைத்துச் செய்யாத வேந்தன் செருவந்த காலத்து அச்சமுற்றுக் கடிதுகெடும். இது தனக்கும் அச்சம் வருவன செய்யலாகாதென்றது.

பரிமேலழகர்

செரு வந்த போழ்தில், சிறை செய்யா வேந்தன், வெருவந்து, வெய்து கெடும். சிறை செய்யா வேந்தன்-செரு வருவதற்கு முன்னே தனக்குப் புகலாவதோர் அரண் செய்துகொள்ளாத அரசன்; செருவந்த போழ்தில் வெருவந்து வெய்து கெடும் - அது வந்த காலத்து ஏமம் இன்மையான் வெருவிக் கடிதின் கெடும். விளக்கம் (பகையை வெருவிச் சேர்ந்தார் நீங்குதலின், தனியனாய்த் தானும் வெருவிச் அப் பகைவயத்தனாம் என்பதாம். இதனால்தான் அஞ்சும் வினையும் அது செய்தான் எய்தும் பயனும் கூறப்பட்டன.)

English explanation

Who builds no fort whence he may foe defy,In time of war shall fear and swiftly die

The king who has not provided himself with a place of defence, will in times of war be seized with fear and quickly perish.