அதிகாரம் / Chapter 57

திருக்குறள் 570

கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லதுஇல்லை நிலக்குப் பொறை.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

கடுங்கோலனாகிய அரசன் அறிவில்லாதாரை அமாத்தியராகக் கூட்டிக் கொள்ளும்; அவ்வரசன் அல்லது நிலத்துக்குப் பாரம் வேறொன்றும் இல்லை.

பரிமேலழகர்

கடுங்கோல் கல்லார்ப் பிணிக்கும்-கடுங்கோலனாய அரசன் நீதி நூல் முதலிய கல்லாதாரைத் தனக்குப் பகுதியாகக் கூட்டாநிற்கும்; அது அல்லது நிலக்குப் பொறை இல்லை-அக்கூட்டம் அல்லது நிலத்திற்கு மிகையாய பாரம் பிறிது இல்லை. விளக்கம் ('கடுங்கோல்' என்பது ஈண்டு மிக்க தண்டத்தின் மேற்று 'அன்றி, அதனைச் செய்வான் மேற்று ஆயிற்று. அவன் அது செய்தற்கு இயைவாரை அல்லது கூட்டாமையின், 'கல்லார்ப் பிணிக்கும்' என்றும், ஏனையவற்றை எல்லாம் பொறுக்கின்றது இயல்பு ஆகலின், நிலத்திற்குப் 'பொறை அது அல்லது இல்லை' என்றும் கூறினார். நிலக்கு என்பது செய்யுள் விகாரம். இதனான் வெருவந்த செய்தலின் குற்றம் கூறப்பட்டது.)

English explanation

Tyrants with fools their counsels share:Earth can no heavier burthen bear

The earth bears up no greater burden than ignorant men whom a cruel sceptre attaches to itself (as the ministers of its evil deeds).