அதிகாரம் / Chapter 58
திருக்குறள் 571
கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகைஉண்மையான் உண்டிவ் வுலகு.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
கண்ணோட்டமாகிய பெரிய அழகு அரசன்மாட்டு உண்டானபடியினாலே, இவ்வுலகநடை யாகின்றது. இஃது அஃதில்லையாயின் உலகங்கெடும் ஆதலால் கண்ணோடவேண்டுமென்றது.
பரிமேலழகர்
கண்ணோட்டம் என்னும் கழி பெருங் காரிகை உண்மையான்- கண்ணோட்டம் என்று சொல்லப்படுகின்ற சிறப்பு உடைய அழகு அரசர்மாட்டு உண்டு ஆகலான்; இவ்வுலகு உண்டு-இவ்வுலகம் உண்டாகாநின்றது. விளக்கம் ('கழிபெருங்காரிகை' என்புழி ஒரு பொருட் பன்மொழி. இவ் உயிரழகது சிறப்புணர நின்றது. இவ்வழகு அதற்கு உறுப்பு ஆகலின், 'உண்மையான்' என நிலைபேறும் கூறினார். இன்மை வெகு வந்த செய்தல் ஆகலின், அவர் நாட்டு வாழ்வார் புலியை அடைந்த புல்வாயினம் போன்று ஏமஞ் சாராமை பற்றி, 'இவ்வுலகுண்டு' என்றார்.)
English explanation
Since true benignity, that grace exceeding great, residesIn kingly souls, world in happy state abides
The world exists through that greatest ornament (of princes), a gracious demeanour.