அதிகாரம் / Chapter 58
திருக்குறள் 572
கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்உண்மை நிலக்குப் பொறை.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
உலகநடை கண்ணோட்டத்தின்கண்ணது: ஆதலால், அஃதில்லாதார் உளராயிருத்தல் நிலத்துக்குப் பாரமாம். இது கண்ணோட்டமில்லாதாரை நிலம் பொறாதென்றது.
பரிமேலழகர்
உலகியல் கண்ணோட்டத்து உள்ளது-உலகநடை கண்ணோட்டத்தின் கண்ணே நிகழ்வது; அஃது இலார் உண்மை நிலக்குப் பொறை-ஆகலான், அக்கண்ணோட்டம் இல்லாதார் உளராதல் இந்நிலத்திற்குப் பாராமாதற்கே, பிறிதொன்றற்கு அன்று. விளக்கம் (உலகநடையாவது: ஒப்புரவு செய்தல், புறந்தருதல், பிழைத்தன பொறுத்தல் என்ற இவை முதலாயின. அவை நிகழாமையால் தமக்கும் பிறர்க்கும் பயன்படார் என்பதுபற்றி, 'நிலக்குப்பொறை' என்றார். 'அதற்கு' என்பது சொல்லெச்சம். இவை இரண்டு பாட்டானும் கண்ணோட்டத்தது சிறப்புக் கூறப்பட்டது.)
English explanation
The world goes on its wonted way, since grace benign is there;All other men are burthen for the earth to bear
The prosperity of the world springs from the kindliness, the existence of those who have no (kindliness) is a burden to the earth.