அதிகாரம் / Chapter 126

திருக்குறள் 1254

நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம்மறையிறந்து மன்று படும்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

யானே நிறையுடையே னென்றிருப்பன்; இப்படி இருக்கவும், என் காமமானது மறைத்தலைக்கடந்து மன்றின்கண் வெளிப்படாநின்றது. இது தலைமகள் ஆற்றாமையாற் கூறிய சொற்கேட்டு நிறையுடையார் இவ்வாறு செய்யாரென்ற தோழிக்கு அவள் கூறியது.

பரிமேலழகர்

இதுவும் அது. யான் நிறையுடையேன் என்பேன் - இன்றினூங்கெல்லாம் யான் என்னை நிறையுடையேன் என்று கருதியிருந்தேன்; என் காமம் மறை இறந்து மன்றுபடும் - இன்று என் காமம் மறைத்தலைக் கடந்து மன்றின்கண் வௌ¢ப்படா நின்றது. விளக்கம் (மன்னும் ஓவும் மேலவற்றின்கண் வந்தன. மன்று படுதல் - பலரும் அறிதல். 'இனித் தன் வரைத்து அன்று' என்பதாம்.)

English explanation

In womanly reserve I deemed myself beyond assail;But love will come abroad, and casts away the veil

I say I would be firm, but alas, my malady breaks out from its concealment and appears in public.