அதிகாரம் / Chapter 126
திருக்குறள் 1253
மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்தும்மல்போல் தோன்றி விடும்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
காமத்தை யான் அடக்கக்கருதுவேன்: அவ்வாறு செய்யவும். அது தும்மல் தோன்றுமாறுபோல என் குறிப்பின்றியும் தோன்றாநின்றது. இது தலைமகள் நிறையழிந்து கூறிய சொற்கேட்டு இவ்வாறு செய்யாது இதனை மறைத்தல் வேண்டுமென்ற தோழிக்கு அவள் கூறியது.
பரிமேலழகர்
'மகளிர் காமம் மறைக்கப்படும்,' என்றாட்குச் சொல்லியது. காமத்தை யான் மறைப்பேன் - இக்காமத்தை யான் என்னுள்ளே மறைக்கக் கருதுவேன்; குறிப்பு இன்றித் தும்மல் போல் தோன்றிவிடும் - அதனாலென், இஃது என் கருத்தின் வாராது தும்மல்போல வௌ¢ப்பட்டே விடா நின்றது. விளக்கம் ('மன்' ஒழியிசைக்கண் வந்தது. ஓகாரம் - இரங்கற்கண் வந்தது. தும்மல் அடங்காதாற்போல அடங்குகின்றதில்லை" என்பதாம்.)
English explanation
I would my love conceal, but like a sneezeIt shows itself, and gives no warning sign
I would conceal my lust, but alas, it yields not to my will but breaks out like a sneeze.