அதிகாரம் / Chapter 126
திருக்குறள் 1252
காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தையாமத்தும் ஆளும் தொழில்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
காமமென்றொன்று கண்ணோட்டமுடைத்தன்று: என்னெஞ்சத்தை நடுநாள் யாமத்தினும் தொழில்கொள்ளா நின்றது. தொழில் கொள்ளுதலாவது அப்பொழுது அவர்மாட்டுப் போக விடுத்தல். இது நெஞ்சின் மிக்கது வாய்சோர்ந்து ஆற்றாமையால் தலைமகள் தோழிக்குக் கூறியது.
பரிமேலழகர்
நெஞ்சின்கண் தோன்றிய காமம் நெஞ்சால் அடக்கப்படும்' என்றாட்குச் சொல்லியது. யாமத்தும் என் நெஞ்சத்தைத் தொழில் ஆளும் - எல்லாரும் தொழிலொழியும் இடையாமத்தும் என் நெஞ்சத்தை ஒறுத்துத் தொழில் கொள்ளா நின்றது; காமம் என ஒன்று கண் இன்று - ஆகலாற் காமம் என்று சொல்லப்பட்ட ஒன்று கண்ணோட்டம் இன்றாயிருந்தது. விளக்கம் ('ஓ' என்பது இரக்கக் கூறிப்பு. தொழிலின்கண்ணேயாடல் ?- தலைமகன்பாற் செலவிடுத்தல் தாயைப் பணி கோடல் உலகியலன்மையின் 'காமம் என ஒன்று' என்றும், அது தன்னைக் கொள்கின்றது அளவறியாது கோடலின் 'கண்ணின்று' என்றும் கூறினாள். அடக்கப்படாமை கூறியவாறு.)
English explanation
What men call love is the one thing of merciless power;It gives my soul no rest, e'en in the midnight hour
Even at midnight is my mind worried by lust, and this one thing, alas! is without mercy.