அதிகாரம் / Chapter 29

திருக்குறள் 287

களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்ஆற்றல் புரிந்தார்கண்ட இல்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

களவாகிய பொல்லா அறிவுடைமை நேராகிய பெருமையைப் பொருந்தினார்மாட்டு இல்லை. இது நேரறிந்தவர் களவு காணாரென்றது.

பரிமேலழகர்

களவு என்னும் கார் அறிவு ஆண்மை - களவு என்று சொல்லப்படுகின்ற இருண்ட அறிவினை உடையராதல் 'அளவு என்னும் ஆற்றல் புரிந்தார்கண் இல் - உயிர் முதலியவற்றை அளத்தல் என்னும் பெருமையை விரும்பினார்கண் இல்லை. விளக்கம் (இருள் - மயக்கம். காரியத்தைக் காரணமாக உபசரித்துக் 'களவெனும் கார் அறிவு ஆண்மை' என்றும், காரணத்தைக் காரியமாக்கி 'அளவு என்னும் ஆற்ற' என்றும் கூறினார். களவும் துறவும், இருளும் ஒளியும் போலத் தம்முள் மாறாகலின், ஒருங்கு நில்லா என்பது இவை மூன்று பாட்டானும் கூறப்பட்டது.)

English explanation

Practice of fraud's dark cunning arts they shun,Who long for power by 'measured wisdom' won

That black-knowledge which is called fraud, is not in those who desire that greatness which is called rectitude.