அதிகாரம் / Chapter 29
திருக்குறள் 286
அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்கன்றிய காத லவர்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
களவின்கண்ணே மிக்க ஆசையையுடையவர் நேரின்கணின்று ஒழுகுதலைச் செய்யமாட்டார். இது நேர் செய்ய மாட்டாரென்றது.
பரிமேலழகர்
அளவின்கண் நின்று ஒழுகல் ஆற்றார் - உயிர் முதலியவற்றை அளத்தலாகிய நெற்றியின்கண் நின்று அதற்கு ஏற்ப ஒழுகமாட்டார்; களவின்கண் கன்றிய காதலவர் - களவின் கண்ணே மிக்க வேட்கையை உடையார். விளக்கம் (உயிர் முதலியவற்றை அளத்தலாவது, காட்சி முதலாகச் சொல்லப்பட்ட அளவைகளான் உயிர்ப் பொருளையும், அதற்கு அநாதியாய் வருகின்ற நல்வினை தீவினைக்கு உள்ள விளைவுகளையும், அவற்றான் அது நாற்கதியுள் பிறந்து இறந்து வருதலையும், அது செய்யாமல் அவற்றைக் கெடுத்தற்கு உபாயமாகிய யோகஞானங்களையும், அவற்றான் அஃது எய்தும் விட்டினையும் அளந்து உள்ளவாறு அறிதல். இதனை ஆருகதர் 'தருமத் தியானம்' என்ப. அதற்கு ஏற்ப ஒழுகுதலாவது, அவ்வளக்கப்பட்டனவற்றுள் தீயனவற்றின் நீங்கி நல்லனவற்றின் வழி நிற்றல்.
English explanation
They cannot walk restrained in wisdom's measured bound,In whom inveterate lust of fraudful gain is found
They cannot walk steadfastly, according to rule, who eagerly desire to defraud others.