அதிகாரம் / Chapter 29
திருக்குறள் 288
அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்களவறிந்தார் நெஞ்சில் கரவு.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
நேரறிந்தவர் நெஞ்சத்து அறம் நிற்குமாறுபோல நிற்கும்: களவறிந்தவர் நெஞ்சில் வஞ்சகமும். இது களவு காண்பாரைப் பின்பு களவினின்று தவிர்த்தல் முடியாதென்றது.
பரிமேலழகர்
அளவு அறிந்தார் நெஞ்சத்து அறம் போல நிற்கும் - அவ்வளத்தலையே பயின்றவர் நெஞ்சத்து அறம் நிலை பெற்றார்போல நிலைபெறும்; களவு அறிந்தார் நெஞ்சில் கரவு - களவையே பயின்றவர் நெஞ்சத்து வஞ்சனை. விளக்கம் (உயிர் முதலியவற்றை அளந்தறிந்தார்க்குத் துறவறம் சலியாது நிற்கும் என்பது இவ்வுவமையால் பெற்றாம். களவோடு மாறின்றி நிற்பது இதனால் கூறப்பட்டது.)
English explanation
As virtue dwells in heart that 'measured wisdom' gains;Deceit in hearts of fraudful men established reigns
Deceit dwells in the mind of those who are conversant with fraud, even as virtue in the mind s of those who are conversant with rectitude.