அதிகாரம் / Chapter 29

திருக்குறள் 289

அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்லமற்றைய தேற்றா தவர்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

நேர் ஆகாதன செய்து அவ்விடத்தே கெடுவார்; களவல்லாத மற்றைய அறங்களைத் தெளியாதவர். இது கள்வாரை அரசர் கொல்வரென்றது.

பரிமேலழகர்

அளவு அல்ல செய்தாங்கே வீவர் - அவ்வளவல்லாத தீய நினைவுகளை நினைத்த பொழுதே கெடுவர்; களவு அல்ல மற்றைய தேற்றாதவர் - களவு அல்லாத பிறவற்றை அறியாதவர். விளக்கம் (தீய நினைவுகளான : பொருளுடையாரை வஞ்சிக்கு மாறும், அவ்வஞ்சனையால் அது கொள்ளுமாறும், கொண்ட அதனால் தாம் புலன்களை நுகருமாறும் முதலாயின. நினைத்தலும் செய்தலாகலின், 'செய்து' என்றும், அஃது உள்ள அறங்களைப் போக்கி, கரந்த சொற் செயல்களைப் புகுவித்து அப்பொழுதே கெடுக்கும் ஆகலின், 'ஆங்கே வீவர்' என்றும் கூறினார். மற்றையவாவன: துறந்தார்க்கு உணவாக ஓதப்பட்ட காய், கனி, கிழங்கு சருகு முதலாயினவும், இல்வாழ்வார் செய்யும் தானங்களுமாம். தேற்றாமை: அவற்றையே நுகர்ந்து அவ்வளவால் நிறைந்திருத்தலை அறியாமை. இதனாற் கள்வார் கெடுமாறு கூறப்பட்டது.)

English explanation

Who have no lore save that which fraudful arts supply,Acts of unmeasured vice committing straightway die

Those, who are acquainted with nothing but fraud, will perish in the very commission of transgression.