அதிகாரம் / Chapter 20
திருக்குறள் 200
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்கசொல்லிற் பயனிலாச் சொல்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
சொல்லுவனாயின் பயனுடைய சொற்களைச் சொல்லுக: சொற்களிற் பயனில்லாத சொற்களைச் சொல்லா தொழிக. இது பயனில சொல்லாமை வேண்டுமென்றது.
பரிமேலழகர்
சொல்லில் பயன் உடைய சொல்லுக - சொற்களில் பயன் உடைய சொற்களைச் சொல்லுக; சொல்லில் பயனில்லாச் சொல் சொல்லற்க - சொற்களில் பயன் இல்லாத சொற்களைச் சொல்லாது ஒழிக. விளக்கம் ('சொல்லில்' என்பது இருவழியும் மிகையாயினும், சொற் பொருட் பின்வரு நிலை என்னும் அணி நோக்கி வந்தது, ''வைகலும் வைகல் வரக்கண்டும்'' (நாலடி. 39) என்பது போல. இதனால் சொல்லப்படுவனவும் படாதனவும் நியமிக்கப்பட்டன.)
English explanation
If speak you will, speak words that fruit afford,If speak you will, speak never fruitless word
Speak what is useful, and speak not useless words.