அதிகாரம் / Chapter 20

திருக்குறள் 199

பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்தமாசறு காட்சி யவர்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

பொருளில்லாத சொல்லை மறந்துஞ் சொல்லார்; மயக்கந் தீர்ந்த குற்றமற்ற தெளிவினை யுடையார், இது தெளிவுடையார் கூறாரென்றது.

பரிமேலழகர்

பொருள் தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் - பயனின் நீங்கிய சொற்களை மறந்தும் சொல்லார்; மருள் தீர்ந்த மாசுஅறு காட்சியவர்-மயக்கத்தின் நீங்கிய தூய அறிவினையுடையார். விளக்கம் ('தூய அறிவு' மெய்யறிவு, 'மருள் தீர்ந்த' என்னும் பெயரெச்சம் 'காட்சியவர்' என்னும் குறிப்புப் பெயர் கொண்டது. இவை மூன்று பாட்டானும் பயன்இல் சொல்லாமையின் குணம் கூறப்பட்டது.)

English explanation

The men of vision pure, from wildering folly free,Not e'en in thoughtless hour, speak words of vanity

Those wise men who are without faults and are freed from ignorance will not even forgetfully speak things that profit not.