அதிகாரம் / Chapter 20
திருக்குறள் 198
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்பெரும்பயன் இல்லாத சொல்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
அரிய பொருளை யாராயும் அறிவினையுடையார் சொல்லார்; பெரிய பயனில்லாத சொற்களை, இது மேற்கூறிய குற்றமெல்லாம் பயத்தலின் இதனை யறிவுடையார் கூறாரென்றது.
பரிமேலழகர்
அரும்பயன் ஆயும் அறிவினார்-அறிதற்கு அரிய பயன்களை ஆராய வல்ல அறிவினையுடையார்; பெரும்பயன் இல்லாத சொல் சொல்லார் - மிக்க பயனுடைய அல்லாத சொற்களைச் சொல்லார். விளக்கம் (அறிதற்கு அரிய பயன்களாவன: வீடு பேறும் மேற்கதிச் செலவும் முதலாயின. 'பெரும்பயன் இல்லாத' எனவே பயன் சிறிதும் உடையனவும் ஒழிக்கப்பட்டன.)
English explanation
The wise who weigh the worth of every utterance,Speak none but words of deep significance
The wise who seek after rare pleasures will not speak words that have not much weight in them.