அதிகாரம் / Chapter 21
திருக்குறள் 201
தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்தீவினை என்னும் செருக்கு.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
என்றுந் தீத்தொழில் செய்வா ரஞ்சார்: சீரியரஞ்சுவர், தீவினையாகிய களிப்பை. இஃது இதற்கு நல்லோ ரஞ்சுவ ரென்றது.
பரிமேலழகர்
தீவினை என்னும் செருக்கு-தீவினை என்று சொல்லப்படும் மயக்கத்தை; தீவினையார் அஞ்சார்-முன் செய்த தீவினையுடையார் அஞ்சார்; விழுமியார் அஞ்சுவர்-அஃது இலராகிய சீரியர் அஞ்சுவர். விளக்கம் ('தீவினை என்னும் செருக்கு' எனக் காரியம் காரணமாக உபசரிக்கப்பட்டது. மேல் தொட்டுச் செய்து கைவந்தமையான் 'அஞ்சார்' என்றும், செய்த அறியாமையான் 'அஞ்சுவர்' என்றும் கூறினார்.)
English explanation
With sinful act men cease to feel the dread of ill within,The excellent will dread the wanton pride of cherished sin
Those who have experience of evil deeds will not fear, but the excellent will fear the pride of sin.