அதிகாரம் / Chapter 113

திருக்குறள் 1123

கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்திருநுதற்கு இல்லை இடம்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

என் கண்ணுட் கருமணியகத்து நிற்கும் பாவாய்! நீ அங்கு நின்று போதுவாயாக, எம்மால் விரும்பப்பட்ட அழகிய நுதலினையுடையாட்கு இருத்தற்கிடம் போதாது.

பரிமேலழகர்

இடந்தலைப்பாட்டின்கண் தலைமகள் நீக்கத்துச் சொல்லியது. கருமணியிற் பாவாய் நீ போதாய் - என் கண்ணிற் கருமணியின் கண் உறையும் பாவாய், நீ அங்கு நின்றும் போதருவாயாக; யாம் வீழும் திருநுதற்கு இடம் இல்லை - போதராதிருத்தியாயின் எம்மால் விரும்பப்பட்ட திருநுதலையுடையாட்கு இருக்க இடமில்லையாம். விளக்கம் ('யான் காணாது அமையாமையின் இவள் புறத்துப் போகற்பாலளன்றி என் கண்ணுள் இருக்கற்பாலள்; இருக்குங்கால் நின்னோடு ஒருங்கு இருக்க இடம் போதாமையின். நின்னினும் சிறந்த இவட்கு இடத்தைக் கொடுத்து நீ போதுவாயாக' என்பதாம்.)

English explanation

For her with beauteous brow, the maid I love, there place is none;To give her image room, O pupil of mine eye, begone

O you image in the pupil (of my eye)! depart; there is no room for (my) fair-browed beloved.