அதிகாரம் / Chapter 109
திருக்குறள் 1089
பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்குஅணியெவனோ ஏதில தந்து.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
பிணையையொத்த மடப்பத்தினையுடைய நோக்கினையும் நாணினையும் உடைய வட்குப் பிறிது கொணர்ந்து அணிவது யாதினைக் கருதியோ? பிறரை வருத்துவதற்கு இவைதாமே அமையும். இது, தான் அவளைக் கொடுமை கூறுவான் போல நலம் பாராட்டியது.
பரிமேலழகர்
அணிகலத்தானாய வருத்தம் கூறியது. பிணை ஏர் மடநோக்கும் நாணும் உடையாட்கு - புறத்து மான்பிணைஒத்த மடநோக்கினையும் அகத்து நாணினையும் உடையாளாய இவட்கு; ஏதில தந்து அணி எவன்? - ஒற்றுமை உடைய இவ்வணிகளே அமைந்திருக்க வேற்றுமையுடைய அணிகளைப் படைத்து அணிதல் என்ன பயனுடைத்து ? விளக்கம் (மடநோக்கு - வெருவுதல் உடைய நோக்கு. 'இவட்குப் - பாரமாதலும் எனக்கு அணங்காதலும் கருதாமையின், அணிந்தார் அறிவிலர்' என்பதாம்.)
English explanation
Like tender fawn's her eye; Clothed on is she with modesty;What added beauty can be lent; By alien ornament
Of what use are other jewels to her who is adorned with modesty, and the meek looks of a hind ?