அதிகாரம் / Chapter 103
திருக்குறள் 1024
சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத்தாழாது உஞற்று பவர்க்கு.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
தங்குடியைத் தாழச் செய்யாதே உயரச்செய்யக் கருதுவார்க்கு அவ்வுயர்ச்சி எண்ணாமல் தானே முடிவுபெறும்.
பரிமேலழகர்
தம் குடியைத் தாழாது உஞற்றுபவர்க்கு - தம் குடிக்காம் வினையை விரைந்து முயல்வார்க்கு; சூழாமல் தானே முடிவெய்தும் அவ்வினை முடிக்கும் திறம் அவர் சூழ வேண்டாமல், தானே முடிவெய்தும். விளக்கம் (குடி ஆகு பெயர். தெய்வம் முந்துறு தலான் பயன் கூறியவாறு. இவை இரண்டு பாட்டானும் அதற்குத் தெய்வம் துணையாதல் கூறப்பட்டது.
English explanation
Who labours for his race with unremitting pain,Without a thought spontaneously, his end will gain
Those who are prompt in their efforts (to better their family) need no deliberation, such efforts will of themselves succee d.