அதிகாரம் / Chapter 46
திருக்குறள் 458
மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்குஇனநலம் ஏமாப் புடைத்து.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
மன நன்மை மிக வுடையராயினும் இன நன்மை யுடைமை சான்றோர்க்குக் காவலாதலையுடைத்து. இஃது இனநலம் அல்லாராயின் பிறரா லிகழப்படுவராதலான் இனநலம் இகழ்ச்சி வாராமற் காக்குமென்றது.
பரிமேலழகர்
மனநலம் நன்கு உடையராயினும் - மன நன்மையை முன்னை நல்வினையால் தாமே உடையராயினும்; சான்றோர்க்கு இனநலம் ஏமாப்பு உடைத்து - அமைந்தார்க்கு இனநன்மை அதற்கு வலியாதலையுடைத்து. விளக்கம் ('நன்கால்' என்னும் மூன்றன் உருபு விகாரத்தால் தொக்கது. அந் நல்வினை உள்வழியும் மனநலத்தை வளர்த்து வருதலின், அதற்கு ஏமாப்பு உடைத்தாயிற்று.)
English explanation
To perfect men, though minds right good belong,Yet good companionship is confirmation strong
Although they may have great (natural) goodness of mind, yet good society will tend to strengthen it.