அதிகாரம் / Chapter 20
திருக்குறள் 192
பயனில பல்லார்முன் சொல்லல் நயனிலநட்டார்கண் செய்தலிற் றீது.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
பயனில்லாத சொல்லைக் கொண்டாடுவானை மகனென்னாதொழிக; மக்களில் பதரென்று சொல்லுக, இது மக்கட் பண்பிலனென்றது.
பரிமேலழகர்
பயன் இல பல்லார்முன் சொல்லல் - பயன் இலவாகிய சொற்களை அறிவுடையார் பலர் முன்பே ஒருவன் சொல்லுதல்; நயன் இல நட்டார்கண் செய்தலின் தீது - விருப்பம் இலவாகிய செயல்களைத் தன் நட்டார் மாட்டுச் செய்தலினும் தீது. விளக்கம் ((விருப்பம்இல. வெறுப்பன. இச் சொல் அச்செயலினும் மிக இகழற்பாடு பயக்கும் என்பதாம்.)
English explanation
Words without sense, where many wise men hear, to pourThan deeds to friends ungracious done offendeth more
To speak useless things in the presence of many is a greater evil than to do unkind things towards friends.