அதிகாரம் / Chapter 20

திருக்குறள் 191

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்எல்லாரும் எள்ளப் படும்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

பயனில்லாதவற்றைப் பலர் வெறுக்கச் சொல்லுபவன் எல்லாராலும் இகழப்படுவான்.

பரிமேலழகர்

பல்லார் முனிப் பயன் இல சொல்லுவான் - அறிவுடையார் பலரும் கேட்டு வெறுப்பப் பயன்இலவாகிய சொற்களைச் சொல்லுவான்; எல்லாரும் எள்ளப்படும் - எல்லாரானும் இகழப்படும். விளக்கம் (அறிவுடையார் பலரும் வெறுப்பவே, ஒழிந்தாரானும் இகழப்படுதலின், 'எல்லாரும் எள்ளப்படும்' என்றார். மூன்றன் உருபு விகாரத்தால் தொக்கது.

English explanation

Words without sense, while chafe the wise,Who babbles, him will all despise

He who to the disgust of many speaks useless things will be despised by all.