அதிகாரம் / Chapter 125
திருக்குறள் 1245
செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்உற்றால் உறாஅ தவர்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
நெஞ்சே! யாம் உற்றபின்பு உறாது போனவர் செறுத்தாரென்று அவரைக் கைவிடுதல் இயல்போ?. உறுதல்- விரைந்துறுதல். தலைமகள் தலைமகன் கொடுமையை உட்கொண்ட நெஞ்சிற்குச் சொல்லியது.
பரிமேலழகர்
இதுவும் அது. நெஞ்சே - நெஞ்சே; யாம் உற்றால் உறாஅதவர்யாம் தம்மையுறத் தாம் உறாத நம் காதலரை; செற்றாரெனக் கைவிடல் உண்டோ - வெறுத்தார் என்று கருதிப் புலந்து கைவிட்டிருக்கும் வலி நமக்குண்டோ? இல்லை. விளக்கம் (உறுதல் - அன்பு படுதல். 'அவ்வலி யின்மையின் அவர்பால் செல்வதே நமக்குத் தருவது' என்பதாம்.)
English explanation
O heart, as a foe, can I abandon utterlyHim who, though I long for him, longs not for me
O my soul! can he who loves not though he is beloved, be forsaken saying he hates me (now)?