அதிகாரம் / Chapter 77

திருக்குறள் 762

உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்தொல்படைக் கல்லால் அரிது.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

அரசர் கெடுமிடத்து வழிவந்த படைக்கு அல்லது பிறபடைக்குப் போர்க்களத்து அழிவு வந்தவிடத்து, உயிர்க்கு வரும் ஊறு அஞ்சாத வன்கண்மை இல்லை. வழிவந்த படை-வீரன் மகன் வீரன்.

பரிமேலழகர்

தொலைவிடத்து உலைவிடத்து ஊறு அஞ்சா வன்கண்-தான் சிறியதாய வழியும் அரசற்குப் போரின்கண் உலைவுவந்தால் தன் மேலுறுவதற்கஞ்சாது நின்று தாங்கும் வன்கண்மை, தொல்படைக் கல்லால் அரிது-அவன் முன்னோரைத் தொடங்கிவரும் படைக்கல்லது உளதாகாது. விளக்கம் (இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. மூலப்படை, கூலிப்படை, நாட்டுப்படை, காட்டுப்படை, துணைப்படை, பகைப்படை என்னும் அறுவகைப்படையுள்ளும் சிறப்புடையது மூலப்படை யாகலான், அதனை அரசன் 'வெல்பொறியும் நாடும் விழுப்பொருளும் தண்ணடையும்-கொல்களிறும் மாவும் கொடுத்தளிக்க' [பு.வெ.மா.தும்பை.-2] என்பது குறிப்பெச்சம். இப்படையை வடநூலார் 'மௌலம்' என்ப.)

English explanation

In adverse hour, to face undaunted might of conquering foe,Is bravery that only veteran host can show

Ancient army can alone have the valour which makes it stand by its king at the time of defeat, fearless of wounds and unmindful of its reduced strength.