அதிகாரம் / Chapter 77

திருக்குறள் 761

உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்வெறுக்கையுள் எல்லாம் தலை.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

யானை, குதிரை, தேர், கருவி, காலாளாகிய உறுப்புகளால் அமைந்து, இடுக்கண் உற்றால் அதற்கு அச்சமின்றி, வெற்றியுடைய படை, அரசன் தேடியபொரு ளெல்லாவற்றினும் தலையான பொருள்; ஆதலால் படைவேண்டும்.

பரிமேலழகர்

உறுப்பு அமைந்து ஊறு அஞ்சா வெல்படை-யானை முதலிய நான்கு உறுப்பானும் நிறைந்து போரின்கண் ஊறுபடுதற்கு அஞ்சாது நின்று பகையை வெல்வதாய படை; வேந்தன் வெறுக்கையுள் எல்லாம் தலை-அரசன் செல்வங்கள் எல்லாவற்றுள்ளும் தலையாய செல்வம். விளக்கம் (ஈண்டுப் 'படை' என்றது, அந்நான்கண் தொகுதியை, ஊறு அஞ்சியவழி வேறல் கூடாமையின், 'ஊறு அஞ்சா' என்றும், ஒழிந்த அங்கங்கட்கும் அரசன் தனக்கும் காவலாகலின் 'வெறுக்கையுள் தலை' என்றும் கூறினார்.)

English explanation

A conquering host, complete in all its limbs, that fears no wound,Mid treasures of the king is chiefest found

The army which is complete in (its) parts and conquers without fear of wounds is the chief wealth of the king.